தேர்தல் முன் மம்தா பேனர்ஜி அதிரடி திட்டம்...! - '10ம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 ' ...!
Mamata Banerjee action plan before elections 1500 per month youth completed 10th standard
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் அரசியல் போட்டி உருவாகியுள்ளது.
இந்த சூழலில், மாநிலத்தின் இளைஞர்களை குறிவைத்து முதல்வர் மம்தா பானர்ஜி புதிய நலத்திட்டத்தை அறிவித்துள்ளார்.

“யுவசக்தி” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இன்றி இருக்கும் 21 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் மார்ச் 7 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி நடைபெற்ற போராட்டத்தின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து பாஜக கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவர்வதற்காக அறிவிக்கப்பட்ட “தேர்தல் நேர இலவச திட்டம்” என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
English Summary
Mamata Banerjee action plan before elections 1500 per month youth completed 10th standard