பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம்.? வெளியாகப் போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,  பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள்,  மல்லித்தூள், கடுகு,  சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு , மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ. 2500 வழங்கப்பட்ட நிலையில், தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ. 1000 பணத்தை சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால் சிறப்பு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pongal gift money for ration card


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->