மக்களின் தீர்ப்பே உயர்ந்தது, அதனை மதிப்பதே ஜனநாயகத்திற்கு உண்மையான மரியாதை - டாக்டர் இராமதாஸ் அறிக்கை! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான செயல் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, ஜனநாயகத்தின் அடிப்படை பெரும்பான்மை ஆதரவு பெற்ற தலைமையினரை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும். அந்த பொறுப்பில் ஆளுநர் அவர்கள் சரியான முறையில் செயல்பட வேண்டியது அவசியம்.

தமிழக மக்களின் ஜனநாயக உரிமையைப் புறக்கணிக்காமல், அரசியலமைப்புச் சட்ட மரபுகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் உடனடியாக பின்பற்றி, மக்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

மக்களின் தீர்ப்பே உயர்ந்தது, அதனை மதிப்பதே ஜனநாயகத்திற்கு உண்மையான மரியாதையாகும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk Ramadoss condemn to TN Governor


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->