ஆப்கானுக்கு எதிரான டி20 போட்டி; 30 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா..! - Seithipunal
Seithipunal


ஆப்கன் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றிப்பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று மூன்றாவது மற்றும் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. 

இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடி காட்டினர். இதில் சஞ்சு சாம்சன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் வாணவேடிக்கை கட்டிய அபிஷேக் சர்மா வெறும் 34 பந்துகளில், 11 ஆறு, 09 நான்கு ரன்கள் என 108 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது 30 பந்துகளில் அவர் 100 ரன்கள் அடித்து, சதம் கடந்துள்ளார்.

தற்போதுவரை 04 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி, 198 ரன்களை குவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhishek Sharma sets a world record by scoring a century off 30 balls


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->