எண்ணூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆட்டோவில் பிரசவம்; பெண் குழந்தை பிறப்பு..!
Baby girl born in an auto rickshaw while on the way to the hospital near Ennore
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (30). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி கீர்த்தி (22). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணமான நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திக்கு, எண்ணூரை சேர்ந்த சுந்தரின் சகோதரி கலைச்செல்வி வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்தியுள்ளனர். அதன்பிறகு கீர்த்தி அங்கேயே தங்கியிருந்தார்.
இன்று காலை கீர்த்திக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக கணவர் சுந்தர், உறவினர்கள் ஆகியோர் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளனர். ஆட்டோ கத்திவாக்கம் மேம்பாலம் அருகே செல்லும்போது கீர்த்திக்கு வலி அதிகமா கியுள்ளது.ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவிலேயே கீர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
உடனடியாக கீர்த்தியையும் குழந்தையையும் அன்னை சிவகாமி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதன்பின்னர் அங்கிருந்து தாயையும் குழந்தையையும் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
Baby girl born in an auto rickshaw while on the way to the hospital near Ennore