சூடானில் தங்க சுரங்கம் விபத்தில் இதுவரை 82 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள அல்-சாரா தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில், இதுவரை குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் வழக்கம் போல் தொழிலாளர்கள், தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி தவித்துள்ளனர்.

இதை பார்த்ததும் சக தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விபத்தில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன நிலையில், மேலும் பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தங்க சுரங்க விபத்து நடந்த பகுதியானது சூடான் நாட்டின் அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் 'ஆர்எஸ்எப்' (RSF - Rapid Support Forces) என்ற துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

82 people have died so far in a gold mine accident in Sudan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->