CM ஸ்டாலினை கண்டித்து போரட்டம்! பாமக எம்எல்ஏ அருள் கைது! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதல்வரை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதல்வரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 1000 கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர். 

போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து, களைந்து செல்ல அறிவுத்திய நிலையில், போலீசாருக்கும், பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டவர்களை கைது செய்த போலீசார், சேலம் கோட்டை சூசன் அம்மாள் சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Protest CM MK STalin PMK Ramadoss


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->