பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைப்பதா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால் தான். இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது. இதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு முதலே ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பாலின் விற்பனை விலை 900 மி.லி. ரூ. 50 ஆகும். கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் ஆவின் நிறுவனம் அப்போது அந்த முயற்சியை கைவிட்டது. ஆனால், இப்போது பச்சைப்பால் விற்பனையை மீண்டும் நிறுத்தத் துடிக்கிறது.

ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது. ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss condemn to aavin tvk Govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->