பாமகவின் 23 டார்கெட்., வெளியான பட்டியல்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி உடன்படிக்கை, போட்டியிடப்போகும் தொகுதி, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று சூறாவளியை விட வேகமாக பணியாற்றி வருகிறது.

தமிழகத்தில் முதல் கூட்டணி தொகுதி பங்கீடு உடன்படிக்கையாக அதிமுக- பாமக இடையே ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

மேலும், பாமக பாட்டாளி மக்கள் கட்சியை போட்டியிடப் போகும் தொகுதியில் குறித்து ஒரு பட்டியலை அதிமுக தலைமைக்கு கொடுத்துள்ளது.

இந்த பட்டியல் குறித்து வெளியான தகவலின் படி, 

வேளச்சேரி, செய்யார், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர், மேட்டூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, அணைக்கட்டு, ஆற்காடு தொகுதிகளிலும் பாமக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியான பட்டியல் தெரிவிக்கிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வ பட்டியல் இல்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK 23 SEAT INFO


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->