நியூசிலாந்து பிரதமருக்கு, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி!!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்த் நாட்டில் இன்று நடைபெற்ற பொது தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில், 64 இடங்களை பிரதமர் ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். ஓராண்டுக்கு முன் நடந்த நமது சந்திப்பை நினைத்து பார்க்கிறேன். இந்தியா - நியூசிலாந்து இடையேயான உறவை, மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்." என்று பிரதமர் மோடி அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi wish to new zealand pm


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->