சென்னையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்..! - Seithipunal
Seithipunal


சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெற்ற 979 இடங்களிலும் இன்று (23.12.2025) முதல் 18.01.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தேர்தல் இணைய தளத்திலும் (VOTERS' SERVICE PORTAL) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் இதனைப் பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கானப் படிவங்களை இங்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண் 1913-இல் தொலைபேசியின் வாயிலாக கேட்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Chennai a polling booth level officer has been appointed at each polling station


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->