பிரதமர் மோடியை சந்தித்தார் நீரஜ் சோப்ரா..!
Neeraj Chopra met Prime Minister Modi
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் ஆக கௌரவ பட்டம் பெற்றுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை நீரஜ் சோபரா, தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது; ''இன்று காலை லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம்'' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Neeraj Chopra met Prime Minister Modi