டிரம்பை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்புடுகிறார் - 5 காரங்களை சொன்ன ராகுல்காந்தி!
PM Modi Trump Rahul Gandhi BJP
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷியாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உறுதி அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று டிரம்ப் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இந்த அறிக்கையை தொடர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமரை நேரடியாக குறிவைத்து கடும் விமர்சனம் செய்தார்.
அவர் பதிவில், “டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார். ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்காத தீர்மானத்தை அவரே டிரம்பிடம் அறிவிக்க அனுமதிக்கிறார். அமெரிக்க அதிபரால் மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்து செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.
அதோடு, அமெரிக்காவுக்கு செல்ல இருந்த நிதி அமைச்சரின் பயணத்தை ரத்து செய்ததும், ஷார்ம் எல்-ஷேய்க் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்ததும் இதன் சான்றுகள். மேலும், டிரம்பின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த கருத்துக்கு எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த கூற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ruling BJP தரப்பு இதற்கு எதிராக கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
English Summary
PM Modi Trump Rahul Gandhi BJP