3 நாள் பயணத் திட்டம்! பொங்கல் திருநாளில் தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி..?!
pm modi tamilnadu 2026 pongal visit
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி வரும் பொங்கல் திருநாளைத் தமிழக மக்களுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13 முதல் 15 வரை மொத்தம் 3 நாட்கள் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
உத்தேச பயணத் திட்டம்:
ஜனவரி 13 (ராமேஸ்வரம் & புதுக்கோட்டை): ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண நிறைவு விழாவிலும் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
ஜனவரி 14 (பொங்கல்): பொங்கல் திருநாளன்று, தமிழக விவசாயிகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மோடி திட்டமிட்டுள்ளார். பின்னர், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவும் வாய்ப்புள்ளது.
தேர்தல் களம்:
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
English Summary
pm modi tamilnadu 2026 pongal visit