பெரியார் நூலகத்திற்கு கண் திருஷ்டி பொம்மையா? பகுத்தறிவு சர்ச்சையால் நீக்கம்!
periyar Coimbatore library controversy
தந்தை பெரியார் பெயரில் தமிழ்நாடு அரசு கோவை காந்திபுரத்தில் கட்டி வரும் நூலகம் மற்றும் அறிவியல் மைய நுழைவாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியது.
மூடநம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் பெயரில் நிறுவப்படும் இடத்தில் இப்படிப் போன்று ஒரு சின்னம் வைக்கப்பட்டிருப்பது பலரின் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்த தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன், "பெரியார் பெயருடன் முரணாக மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் கண் திருஷ்டி சின்னம் வைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. உடனே அது அகற்றப்பட வேண்டும்; இல்லையெனில் அந்த இடத்தில் தபெதிக ஆர்ப்பாட்டம் நடத்தும்" என எச்சரித்தார்.
அந்தப் பின்னணியில், கோவையில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த கண் திருஷ்டி படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
English Summary
periyar Coimbatore library controversy