'பெகாசஸ்' விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.! - Seithipunal
Seithipunal


'பெகாசஸ்' விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 200 பேரின் செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியது. 

அந்த செய்தியில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் 'பெகாசஸ்' மூலம், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின்  செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

இதுகுறித்து பாஜக மற்றும் மத்திய அரசு தரப்பில், இது சர்வதேச சதி., யாருடைய செல்போனும் ஒட்டு கேட்படவில்லை என்று தெரிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2ஜி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் பொதுநல வழக்கு தொடரும் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க" வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pegasus issue appeal to supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->