கேப்டன் நினைவிடத்தில் மரியாதை: பிரேமலதாவுடன் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி...!
Paying respects Captains memorial Edappadi Palaniswami and Premalatha pay tribute
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், வானத்தைப் போல விசாலமான மனமும், “இயன்றதைச் செய்வோம் – இல்லாதவர்க்கே” என்ற மனிதநேயக் கோட்பாட்டையும் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்த பத்ம பூஷன் விருது பெற்ற அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நினைவு நாளையொட்டி, சென்னை தே.மு.தி.க. தலைமையகத்தில் அமைந்துள்ள “கேப்டன் ஆலயம்” நினைவிடத்தில் நடைபெற்ற குருபூஜை நிகழ்வில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திரையுலகிலும் பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைகள் என்றும் மக்கள் மனங்களில் நீங்காத புகழாக நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டு, அவரது நினைவுகளை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்துள்ளார்.
English Summary
Paying respects Captains memorial Edappadi Palaniswami and Premalatha pay tribute