கூட இருந்தவர்களுக்கே தெரியாமல் தவெகவில் தஞ்சம் புகுந்த பாஜ நிர்வாகி; 07-வது கட்சிக்கு தாவியதால் கட்சிக்காரர்கள் அதிருப்தி..!
Party members in Salem are unhappy with BJP executive MLA Venkatachalam joining the TVK
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னையில் தனது ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோருடன், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டார். தவெக-வில் இன்று இணைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபி செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் ஒருவராக சேலம் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலமும், செங்கோட்டையனுடன் சென்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்கனவே, அதிருப்தியால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம். அவருக்கு அக்கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதோடு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகவும் வெங்கடாசலம் இருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையனுடன் சென்று விஜய் கட்சியில் அவர் இணைந்தது குறித்து சேலம் பாஜக நிர்வாகிகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வரை கட்சி பதவியில் நீடித்தவர், எங்களுக்கு தெரியாமல் எப்படி ஓடிச்சென்று விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார் என்று தெரியாமல் நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.
இது குறித்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் தெரிவிக்கையில்; ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம், பாஜகவில் இணைந்த பிறகு மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்னாள் எம்எல்ஏ என்ற முறையில் கட்சியினர் அவரை நல்ல மரியாதையோடு நடத்தினர். ஆனால், எங்களுக்கே தெரியாமல் செங்கோட்டையனுடன் ஓடிச்சென்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், அதிமுக, தேமுதிக, பாஜக என்று பல்வேறு கட்சிகளில் இணைந்தவர். தற்போது வேறு வழியில்லாமல் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இந்த வகையில் இது அவர் இணைந்துள்ள 07 வது கட்சி என்று அவரை கிண்டலிக்க தொடங்கியுள்ளனர்.
English Summary
Party members in Salem are unhappy with BJP executive MLA Venkatachalam joining the TVK