டெங்கு காய்ச்சலுக்கு GOOD BYE: சிங்கிள் டோஸ் தடுப்பூசி கண்டுபிடித்துள்ள பிரேசில்; ஒப்புதல் அளித்துள்ள அந்நாட்டு அரசு..! - Seithipunal
Seithipunal


முந்தைய காலங்களை விட தற்போது டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த 2023-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த டெங்கு காய்ச்சலை தடுக்க ஜப்பானின் இரண்டு டோஸ் TAK-003 தடுப்பூசியும், 03 டோஸ் போடப்படும் தடுப்பூசியும் உள்ளன.

இந்நிலையில், பிரேசிலின் பூடன்டன் நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு டோஸ் மட்டுமே போடப்படும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பூடன்டன் -டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் வகையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 08 ஆண்டுகளாக நடைபெற்ற பரிசோதனையில் இருந்த குறித்த தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வருகின்றமை, டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மருத்துவ பரிசோதனையில் 16 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் போது குறித்த தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் டெங்குவை தடுப்பதில் 80 சதவீதம் திறன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, டெங்குவால் பாதிக்கப்படாதவர்களுக்கு இது 74 சதவீதம் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 சதவீதம் பாதுகாப்பையும் இந்த தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் வழங்க முடியும் என பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், இந்த தடுப்பூசியானது 02- 06 வயதுள்ள குழந்தைகளுக்கு 80 சதவீத பாதுகாப்பையும், 07- 17 வயதுள்ளவர்களுக்கு78 சதவீத பாதுகாப்பையும், 59 வயதுள்ளவர்களுக்கு 90 சதவீத பாதுகாப்பையும் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பக்கவிளைவாக லேசான காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தடுப்பொசியை கண்டுபிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brazil has approved a single dose vaccine for dengue fever


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->