பொது சிவில் சட்டத்திற்கு நாள் குறித்த பாஜக? புதிய கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர்? வெளியான பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரர்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இது போன்ற சிறப்பு கூட்டத்தொடர் மிகவும் அரிதாக கூட்டப்படும் நிலையில் மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரத்தால் முடங்கிய நிலையில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் கூட்டம் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பே நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டம் இருப்பது பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்காகவா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

இது போன்ற சிறப்பு கூட்ட தொடர்கள் முக்கியமான விவகாரத்தின் போது கூட்டப்படுவது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல் படுத்துவதற்காக நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதன் பிறகு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parliament pecial session will be held from September 18 to 22


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->