பயங்கரவாதி ரஸாவுல்லாவுக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தான்?!
Pakistan terrorist kill in Pak
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்று முன்தினம் `இரவு இடம்பெற்ற தாக்குதலில், முக்கிய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஸாவுல்லாவின் மரணத்திற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜேசி) என்பவை இரங்கல் தெரிவித்து ள்ளன. இது, பாகிஸ்தானின் ராணுவ ஆதரவு மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் அதன் நேரடி தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது.
ரஸாவுல்லா காலித், 2006ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் திட்டத்தின் மூளையாகக் கருதப்படுகிறார். இந்தியாவின் தேடல்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த இவர், பல்வேறு தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவால் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் அரசு, ரஸாவுல்லாவுக்கு பாதுகாப்பும் தங்குமிடமும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் மரணத்திற்கு பயங்கரவாத அமைப்புகள் அரசியல் ஆதரவு வழங்குவது, அந்த நாடு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருகிறது எனும் குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
English Summary
Pakistan terrorist kill in Pak