படப்பை ரவுடி குணாவால் சிக்கலில் சிக்கிய 47 போலீஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பவர் 'படப்பை ரவுடி குணா'. இவர் மீது பல்வேறு குற்றச் வழக்குகள் உள்ள நிலையில், இவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த படப்பை குணா என்ற ரவுடி மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், படப்பை ரவுடி குணாவிற்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள், நான்கு உதவி காவல் ஆய்வாளர் மற்றும் 40 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ரவுடி குணாவின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில், 'தனது கணவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்யக்கூடாது' என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து காவல்துறை காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவரை என்கவுண்டர் செய்யும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. அவர் சரண் அடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு அவர் நடத்தபடுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

padappai rowdy guna case issue 47 police


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->