ஸ்டாலினை நேரில் சந்தித்த ப.சிதம்பரம்...! - கூட்டணி அரசியலில் புதிய திருப்பமா...? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி நகர்வுகள், விருப்ப மனு தாக்கல், பிரசாரத் தயாரிப்புகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை உருவாக்கம் என அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.

இதனால் தேர்தல் களத்தில் அரசியல் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி புதிதாக உருவான த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த தகவல்களை காங்கிரஸ் தரப்பு முற்றிலும் மறுத்தது.இதற்கிடையே, தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்தது.

அந்த குழு கடந்த 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பு, காங்கிரஸ் – த.வெ.க. கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட கருத்து, தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஆட்சியில் பங்கு குறித்து கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த திடீர் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய ஊகங்களையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Chidambaram met Stalin person new twist alliance politics


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->