கடும் கோவத்தில் ஓபிஎஸ் போட்ட பரபரப்பு டிவிட்.! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிறுவனுருமான எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிலை ஒன்று உள்ளது.

எம்.ஜி.ஆர் சிலையின் அருகே வெடி வெடித்த திமுக தொண்டர்கள் அதில் ஒரு வெடி தெறித்து கொண்டு வந்து எம்.ஜி.ஆர் சிலை மீது விழுந்து வெடித்தது. இதில் எம்.ஜி.ஆர் சிலை பற்றி எரிய தொடங்கியது. இந்த சம்பவம் அறிந்த அதிமுக தொண்டர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். 

இந்நிலையில், திமுகவினரால் எம்.ஜி.ஆர் சிலை எரிக்கப்பட்டடத்துக்கு கடும் கண்டனத்தை, அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை எரிப்பு நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் உண்டாக்கிய மாபெரும் தலைவர்; கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்  சிலை எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட திமுக வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு திரு ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்றுகொள்ள வேண்டும்." என்று ஓ. பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops warn to stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal