விஜயுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தயார் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதே கூட்டணியில் இருப்பதாக அறிவித்து வருகிறார்.

அ.தி.மு.க.-வில் மீண்டும் இணைவதற்கான அவரது முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அந்த வாய்ப்பு இப்போது மங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, கூட்டணிக்கு அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டபோது, அதற்காக தன்னை அழைக்காதது வருத்தமளித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதற்கான பதிலில், "அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்" என அமித்ஷா பக்கவாட்டில்லாமல் பதிலளித்தார்.

இதன் பின்னணியில், பா.ஜ.க.விற்கும் ஓ.பி.எஸ்.விற்கும் இடையிலான உறவிலும் அலைபாய்ச்சி உருவாகி வருகிறது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து, அவர் மற்றும் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

ஜூலை 7-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பா.ஜ.க. கூட்டணியில் தொடர்வதா, விலகுவதா என்பதற்கும், புதிய கட்சி குறித்து தீர்மானிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் விஜய் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும், “அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி இல்லை” என நிர்வாகிகள் ஓபிஎஸ் இடம் தற்போதே வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS TVK Vijay BJP Alliance


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->