அதிமுகவில் மீண்டும் ஒரு டிசம்பர் சம்பவம்.. நடக்கப் போகும் மாற்றம்.!!
ops says about kutty s
சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
இந்த விழாவில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசினார். அப்போது ஒரு கதை சொல்லினர், நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டு இருப்பவர்களை மனம் திருந்த செய்யவே நான் வந்திருக்கிறேன். நல்லவர்களை என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பது நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று இயேசு கூறினார் என ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

தவறு செய்து திருந்தி வருபவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு ஏற்புடையது என o பன்னீர்செல்வம் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சசிகலாவை தான் சொல்கிறார் என பலர் கூறுகின்றனர். அதிமுகவில் இணைய போராடி வரும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்பதில் எடப்பாடிபழனிசாமி உறுதியாக உள்ளார்.

சசிகலாவால் முதலமைச்சர் பதவியை இழந்த ஓபிஎஸ் கூட அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பச்சைக்கொடி காட்டி விட்டதாக அதிமுகவினர் கூறப்படுகிறது. சசிகலாவால் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடிபழனிசாமி அவரை சேர்க்க விரும்பவில்லை. டிசம்பர் மாதத்தில் தான் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக்கினார்கள். 2017இல் அதிமுக ஆட்சி கவிழாமல் பார்த்து கொண்டதில் சசிகலாவிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் ஓபிஎஸ் கூறிய கதையின் மூலம் சசிகலா அதிமுகவில் உள்ளே வருவதற்கு டிசம்பர் மாதம் உதவுமா என கேள்விகள் எழுந்துள்ளது.