வன்மத்துடன் கேள்வி எழுப்பிய செய்தியாளர் | நெத்தியடி பதில் கொடுத்து, இபிஎஸ்-க்கு துணை நின்ற ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த ஐந்தாம் தேதி மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அன்றைய தினம் அவரின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின், உறுதிமொழி ஏற்றார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி, தனது கட்சி உறுப்பினர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ,க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலரும் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 'நினைவு நாளில்' என்று சொல்வதற்கு பதிலாக 'நன்னாளில்' என்று தவறுதலாக சொல்லிவிட்டார். இதனை திமுகவின் செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட சில ஊடகங்களும், ஓபிஎஸ், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சிலரும், திமுகவை சேர்ந்த சிலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி தவறுதலாக கூறிய 'நன்னாளில்' வார்த்தையை குறிப்பிட்டு, உள்நோக்கத்துடன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், சிரித்துக்கொண்டே அது தவறுதலாக சொல்லப்பட்ட வார்த்தை. 'டங்க் ஸ்லிப்' என்று, தான் ஒரு மூத்த அரசியல்வாதி என்பதை நிரூபிக்கும் விதமாக பதில் கொடுத்தார்.

செய்தியாளர் எந்த நோக்கத்துடன் கேள்வி எழுப்பி இருந்தாரோ? அதற்கு மாறாக அரசியல் நாகரீகத்துடன் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தது, அந்த செய்தியாளருக்கு மூக்கு உடைந்தது போல் அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About ADMK EPS Nannal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->