#BigBreaking || அரசியலில் அதிரடி திருப்பம்.. டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அதிமுக செயற்குழு கூடி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனையும் நீக்கினர்.

அதன் பிறகு டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி தனியாக செயல்பட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிமுக பொதுக்குழுவால் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்பொழுது அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவருடனும் சேர்ந்து செயல்பட தயார் என ஏற்கனவே ஓபிஎஸ் அறிவித்திருந்தார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் வி.கே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு நடைபெறவில்லை. எனினும் ஓபிஎஸின் அரசியலுக்கு திருச்சி மாநாடு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருடைய இல்லத்தில் சந்திக்க உள்ளார். இன்று இரவு 7 மணி அளவில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரன் சந்திக்க உள்ளார். 

தற்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வரும் நிலையில் டிடிவி தினகரன் இன்று சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் வி.கே சசிகலாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS meets TTV Dhinakaran in Chennai house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->