#BREAKING : ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. மேலும், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, தமிழக முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS confirmed to be affected by Corona leaked information


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->