ஓ.பி.எஸ் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்!! ஈபிஎஸ் தரப்பு ஷாக்.!!
Ops appellate case hearing on 10th November
அதிமுகவில் இருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
English Summary
Ops appellate case hearing on 10th November