Dr. அன்புமணி இராமதாஸை தொடர்ந்து ஓபிஎஸ் சற்றுமுன் விடுத்த அறிக்கை.! என்ன செய்ய போகிறார் முதல்வர் ஸ்டாலின்?!  - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த  தில்லி செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் மேகேதாட்டு சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார்.

மேகேதாட்டு விவகாரத்தை மேலும் சிக்கலாக்கத் துடிக்கும் கர்நாடகத்தின் முயற்சி கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் நேற்று தெரிவித்து இருந்தார்.

மேலும், கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவற்றை முறியடிப்பதற்கான பதில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும். 

அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த நோக்கத்திற்காகவும், எந்த விதமான அணையும் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினர் நேரில் வலியுறுத்த வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மேகதாது அணைகட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும் தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றும், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், "உடனடியாக இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும். 

மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS ALSO SAY ABOUT MAKADATU ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->