இன்னும் இரு வாரத்தில் வருகிறது தீர்ப்பு : அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஓ பன்னீர்செல்வம் திமுக மற்றும் சசிகலா-டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுகவின் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

மேலும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியத்துடன் அவரின் ஆதரவாளர்கள், அவரின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரையும் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி எம்பி ரவீந்திரநாத் ராஜபாளையத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில்,

"அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-யை நீக்க முடியாது. அதிமுகவின் தலைமை கழகம் யாருக்கும் சொந்தம் கிடையாது.

எளிய தொண்டர்கள் தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தற்போது எதனையும் தெளிவுபடுத்த முடியாத ஒரு நிலை உள்ளது.

அதிமுக தலைமை கழக வழக்கு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரப்போகின்ற இந்த தீர்ப்பு தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று வகையில் இருக்கும்" என்று ஓபிஆர் தெரிவித்தார்.

இரு வாரங்களில் வரப்போகும் தீர்ப்பு முக்கிய தீர்ப்பாக அமையுமா? அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவாகரத்துக்கு முடிவு கட்டப்படுமா என்று அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opr say about sc court order and admk ops vs eps issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->