#BigBreaking || தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு.! சற்றுமுன் அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி 1 லிருந்து 20 வரை ஆன்லைன் மூலமாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று,  கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில் "கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் தேரவ்வுகள் நடத்தப்படும். இறுதியாண்டு தேர்வு ஜூன் மாதத்திற்கு பிறகு தான் நடத்தப்படவுள்ளது. எனவே அந்த தேர்வுகள் நேரடியாகத்தான் நடத்தப்படும்" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு நோய்த்தொற்று பரவலின் சூழலைப் பொறுத்து நேரடி வகுப்புகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் தரம் குறித்து கல்லூரி முதல்வருடன் ஆலோசனை செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online semester exam 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->