கொச்சைப்படுத்திய திமுக அமைச்சர்! "காச புடி, டிக்கெட் கொடு" தன் சுயமரியாதையை மீட்டெடுத்த மூதாட்டி! - Seithipunal
Seithipunal


திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற ஒரு வாக்குறுதியை அளித்தது.

ஆட்சிக்கு வந்தபின் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பல குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, 'பெண்களுக்கு இலவச பயணம்' என்பதை நிறைவேற்றியது. அதன்படி தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்று ஒரு பக்கம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, பேருந்தில் இலவசமாக பயணம் செய்த பெண்களை, நடத்துனர், ஓட்டுனர் அசிங்கமாக நடத்துவதாகவும், மற்ற சக ஆண் பயணிகளும் ஓசியில் பயணம் செய்து வர உங்களுக்கு எதுக்கு இருக்கை என்று அவமானப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.

இதனை அடுத்து பேருந்து ஓட்டுனர், நடத்தினருக்கு சில அறிவுரைகளையும், அறிவுறுத்தல்களையும் போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்கதையாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பெண்களின் தன்மானத்தையும், சுயமரியாதையும் அசிங்கப்படுத்தும் வகையில், "நீங்கள் ஓசிகள் தானே பயணம் செய்கிறீர்கள்" என்ற ஒரு கேள்வியை எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் பிரபல ஊடகம் ஒன்று எடுத்த பேட்டியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், மூதாட்டி ஒருவர் "நான் ஓசியில் இனி பயணம் செய்ய மாட்டேன். நான் ஓசியில் பயணம் செய்வதாக என்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்" என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, தமிழகத்தில் முதல் ஆளாக தன் தன்மானத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்து உள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நடத்துனரிடம் மூதாட்டி பேசியதாவது, "எதற்கு எனக்கு டிக்கெட் தர மறுக்கிறீர்கள். நான் ஓசியில் பயணிக்க மாட்டேன். என்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்களே. எதுக்கு நான் ஓசியில் பயணிக்க வேண்டும். காசை புடி, டிக்கெட் கொடு. முதலில் காசை எடுத்துக் கொண்டு எனக்கு டிக்கெட் கொடு" என்று அந்த மூதாட்டி நடத்துனரிடம் காசை திணித்து தன்மானத்தை மீட்டு எடுத்துக் கொண்டார் (டிக்கெட்டை பெற்றுக் கொண்டார்). 

மூதாட்டியின் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பேருந்தின் உள்ளே இருந்த மற்ற பெண் பயணி மூதாட்டியை பார்த்து, "ஊரே ஓசியில் தான் போய்க்கொண்டிருக்கிறது. உனக்கு மட்டும் என்ன பாட்டி?" என்று கேட்க. அதற்கு மூதாட்டி "தமிழகமே ஓசியில் போனால் என்ன? ஊர் உலகமே ஓசியில் போனால் என்ன? நான் ஓசியில் போக மாட்டேன். நான் ஓசியில் பதிலடி கொடுக்கிறார். இல்லை இல்லை தன் சுயமரியாதை பற்றி பாடம் எடுக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OC Ticket Issue TNGovt BUS DMK minister speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->