நடைப்பயிற்சியின் போது முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்த ஓ. பன்னீர்செல்வம்
O Panneerselvam met Chief Minister during walk and inquired about his well being
கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், முதலமைச்சருக்கு அவரது உடலில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில் அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் மருத்துவமனையிலிருந்து 'டிஸ்சார்ஜ்' ஆகி வீடுதிரும்பினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு சென்னை அடையாரில் நடைபயிற்சி இடத்தில் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இது சுமார் 2 நிமிடங்கள் நடந்த சந்திப்பு என்று தெரிவிக்கின்றனர்.
English Summary
O Panneerselvam met Chief Minister during walk and inquired about his well being