பண்ருட்டி நர்சிங் கல்லூரி மாணவி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.! கல்லூரி நிர்வாகமே பாலியல் வன்கொடுமை.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை காரணமாக, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஏகே குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அந்த 17 வயது மாணவி நேற்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தின் மேலே இருந்து, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

அந்த 17 வயது மாணவி படித்து வந்த நர்சிங் கல்லூரியில் மாதம்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம், கடந்த மாதம் சேலம் அருகே உள்ள ஏற்காடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் நடந்து உள்ளது. 

இந்த மருத்துவ முகாமிற்கு 17 வயது இந்த மாணவியும் சென்றுள்ளார். மேலும்,  கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ஏற்காடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது, அந்த மாணவிகளிடம் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், அந்த 17 வயது மாணவியின் அண்ணனுக்கு இந்த விவகாரம் தெரிய வந்ததால், அந்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்று உள்ளது தற்போது போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.

போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பண்ருட்டி பகுதியில் பதுங்கியிருந்த நிஷா மற்றும் அன்பு ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டேவிட், பிரேம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nursing College Student Attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal