கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்ப்பதுதான் முதல்வருக்கு அழகா? சீமான் விளாசல்!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Coolie
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததை பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வேளச்சேரி திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், முதல்வர் ‘கூலி’ படம் பார்க்கிறார் என்று விமர்சித்தார்.
மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்பதால், ஆட்சியாளர்களை குறை சொல்ல நமக்கு முழு தகுதி இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசு எப்போதும் அதிகார வலிமை இல்லாத மக்களையே குறிவைப்பதாகவும், தற்போது தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவதாக அறிவிக்கிறது என்றாலும், இது பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நேரத்தில் மட்டும் ஏன் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அரசு பல நலத்திட்டங்களை வழங்கும் நிலையில், நிரந்தர வேலைவாய்ப்பையும் வழங்கலாமே என அவர் வலியுறுத்தினார். பணியில் சேர்க்கும்போதே அரசுப்பணியாளர்களாகவே எடுத்திருந்தபோது, அவர்களின் பாதுகாப்பும், நலன்களும் அரசின் பொறுப்பு என்பதை சீமான் நினைவூட்டினார்.
நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் கடமையா அல்லது தனியார் முதலாளிகளின் பொறுப்பா என்ற கேள்வியுடன் அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Coolie