தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிகாரிக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியது ஏன்? கனிமொழிக்கு இடும்பாவனம் கார்த்தி கேள்வி!
NTK Karthik DMK MP Kanimozhi
திமுக எம்பி கனிமொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்களைத் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக சுட்டு வீழ்த்திய கருப்பு தினம்.
தங்களது உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 13 போராளிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம். அவர்கள் மீது துளைத்த துப்பாக்கி குண்டுகளின் வடு இன்னும் நம் மனதிலிருந்து மறையவில்லை, மறக்கவும் செய்யாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யக்கோரி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைகளைக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான சைலேஷ் குமார் யாதவுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Karthik DMK MP Kanimozhi