"தனித்து போட்டி"... ஒன்றையும் பிடுங்க முடியாது எனும் உண்மையை உணர்ந்திருக்கிறார் போலும் திருமா... நாதக பதிலடி!
ntk idumbavanam karthik condemn to vck thirumavalavan dmk mk stalin
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது விசிக.
"தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து மதவாதச் சக்திகளுக்கு ஆதரவாகிவிடும்" எனும் தர்க்கம் புதுச்சேரிக்குப் பொருந்தாதா?
போகட்டும்!
"தனித்து நின்னு என்ன புடுங்கப் போற?" எனக் கேட்ட திருமா, 'திமுக - காங்கிரசு கூட்டணிக்குள் ஒன்றையும் பிடுங்க முடியாது' எனும் உண்மையை உணர்ந்திருக்கிறார் போலும்!
வாழ்த்துகள் அண்ணே திருமாவளவன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "சட்டமன்றத் தேர்தலென்றபோதிலும் பாராளுமன்றத் தேர்தல் போலவே, 'திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போர்' எனக் கருத்துருவாக்கம் செய்ய முனைகிறார் ஸ்டாலின்.
அதிமுக கூட்டணியில் வெறும் 27 இடங்களில்தான் போட்டியிடுகிறது பாஜக. 27 இடங்களில் போட்டியிடும் பாஜகவை 170க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் திமுக, கள எதிரியாகக் கட்டமைப்பது அப்பட்டமான அரசியல் தந்திரம்!
உண்மையில், பாஜக எதிர்ப்புதான் திமுகவுக்குப் பிரதானமென்றால், அந்த 27 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாகக் களம் இறங்கட்டும். அங்கு வலிமையான வேட்பாளர்களைக் களமிறக்கி, சிறப்புக் கவனமெடுத்து, கூடுதல் வேலைகளைச் செய்து, 'ஒரு இடத்தில்கூட பாஜகவை வெல்லவிட மாட்டோம்' என சூளுரைக்கட்டும்.
அதனைச் செய்யத் துப்பிருக்கிறதா துப்புகெட்ட திமுகவுக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ntk idumbavanam karthik condemn to vck thirumavalavan dmk mk stalin