இப்போதைக்கு வேண்டாம்...! - காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க டிடிவி தினகரன் கோரிக்கை
Not for now TTV Dhinakaran requests postponement Cauvery Water Management Authority meeting
டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெறவிருந்ததாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்புடைய நான்கு மாநிலங்களில், கர்நாடகா தவிர்த்து தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இன்னும் வெளிவராத சூழலில், அதிகாரிகளை மட்டுமே கொண்டு இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி டெல்டா பகுதிகளை பாதிக்கும் வகையில், காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக அரசு எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு காரணமாக, இன்றைய கூட்டம் அந்த மாநிலத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதனால், விவசாயிகளின் மனக்குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு, இன்றைய கூட்டத்தை ஒத்திவைப்பதுடன், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் பதவியேற்ற பின்னரே கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Not for now TTV Dhinakaran requests postponement Cauvery Water Management Authority meeting