பாகிஸ்தானில் அதிரடி வேட்டை! அடுத்தடுத்து விழும் தலைகள்...! - ஹபீஸ் சயீத் கூட்டாளி அப்ரிடி சுட்டுக்கொலை..!
Action hunt Pakistan Heads fall one after another Hafiz Saeed associate Afridi shot dead
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட முக்கிய நபராக கருதப்பட்ட ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தான் நாட்டில் மர்மமான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்த தாக்குதல், கைபர் பக்துன்வா மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஷ்கர் இயக்கத்திற்கு ஆட்களை இணைத்தல், திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தவர் யூசுப் அப்ரிடி என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக, கடந்த வாரம் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சம்பவம் இன்னும் பதற்றத்தை அடக்காத நிலையில், தற்போது அப்ரிடி மீதான இந்த தாக்குதல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அப்ரிடி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து, குற்றவாளிகளை விரைவில் கண்டறிய வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்ப்புச் சத்தம் எழுந்துள்ளது.
இதனால் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத், தற்போது லாகூர் துணைச் சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Action hunt Pakistan Heads fall one after another Hafiz Saeed associate Afridi shot dead