ராகுல் காந்தியின் 'விலை உயர்வு' அலார்ட்...! - ஏப்ரல் 29-க்கு பின் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, “தேர்தல் காலத்தின் தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து விட்டது; இப்போது விலைவாசி உயர்வு என்ற எரியும் அலை வேகமாக முன்னேறுகிறது.

ஏப்ரல் 29-க்கு பிறகு நிலையை கவனியுங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில், அதனால் கிடைத்த நன்மைகளை மோடி அரசு பொதுமக்களுடன் பகிரவில்லை; அந்த ஆதாயத்தை தங்களிடமே குவித்துக் கொண்டது.

ஆனால், இப்போது விலை உயர்ந்துள்ள சூழலில், அதன் சுமையை நேரடியாக மக்களின் தோள்களில் ஏற்றத் திட்டமிட்டுள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“விலை குறைந்த நேரங்களில் மக்களைச் சுரண்டி, விலை உயர்வு நேரங்களில் அவர்களைப் போராடவிடும் நிர்வாகம் இது” எனவும் அவர் தனது பதிவில் கடும் விமர்சன குரலில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi price hike alert Petrol diesel prices rise across country after April 29th


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->