அழுத்தம் இல்லை... நம்பிக்கை அதிகம்...! அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி தெளிவு...! - நயினார் நாகேந்திரன்
No pressure plenty confidence AIADMK and BJP alliance clear Nainar Nagendran
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க.–பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியே என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு கோரி பா.ஜ.க. எந்த அழுத்தமும் இதுவரை கொடுக்கவில்லை என்றும் கூறினார்.பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இ.பி.எஸ். இருப்பதாகவும், கூட்டணிக்கு புதிய கட்சிகள் தொடர்ச்சியாக இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். முதல்கட்டமாக பா.ம.க. தலைவர் அன்புமணி இணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், “பொங்கல் முடிந்ததும் மேலும் பல அரசியல் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன… தை பிறந்தால் வழி பிறக்கும்” என அர்த்தமுள்ள பதில் அளித்தார்.
மேலும், சென்சார் போர்டு விவகாரத்தில் முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,“சென்சார் போர்டு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதென்றால், ‘பராசக்தி’ படம் எப்படி வெளியாகியது?” என கேள்வி எழுப்பினார்.
படத்தின் விவரங்களைத் தானே முழுமையாக பார்க்கவில்லை என்றும் கூறினார்.தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வந்திருப்பதாகவும், இன்று நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.“பா.ஜ.க. கொங்கு மண்டலத்துக்கு மட்டும் அல்ல; தமிழகம் முழுவதும் வெற்றிக்காகவே அரசியல் பயணம்” என்றார்.
English Summary
No pressure plenty confidence AIADMK and BJP alliance clear Nainar Nagendran