சிறுமி படுகொலையில் இரக்கமே காட்டக்கூடாது...! சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை...! - டிடிவி தினகரன் வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நிகழ்ந்துள்ள சிறுமி கொலைச் சம்பவம் மனதை உலுக்கும் துயரச் சம்பவமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் குளக்கரையில் வீசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், சமூக மனிதநேயத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு தனிச்சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No mercy should be shown murder girl Strict action needed against those involved TTV Dhinakaran insists


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->