மெரினா பக்கம் போயிடாதீங்க...! சுழன்றடிக்கும் புழுதிக்காற்று...சீறும் கடல் அலைகள்...! - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக தாக்கம் செலுத்தி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்பத்துடன் சூடான காற்றும் வீசியதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகளும் வெப்ப அலை தாக்கத்தில் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், இன்று திடீரென நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. குறிப்பாக மெரினா கடற்கரை பகுதியில் புழுதிக்காற்று வேகமாக வீசியதால் காலை நடைபயிற்சிக்காக வந்திருந்தோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பல இடங்களில் குளிர்ச்சியான காற்றோட்டம் நிலவி வரும் நிலையில், கடல் அலைகளும் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுவதால் மெரினா கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான காற்று வீசுவதால் நகரம் முழுவதும் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மதியம் 1 மணி வரை சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont go towards marina Swirling dust storm crashing sea waves Emergency warning public


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->