விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!...நேரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக விருதுநகர் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமான நிலையம் அடைந்தார். தொடர்ந்து கார் மூலம்  விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு,  சத்திரரெட்டியபட்டி விலக்கில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும்  60 ஆயிரம் கட்சி தொண்டர்கள் திரண்டு, தி.மு.க. கொடியுடன் முதலமைச்சரை வரவேற்றனர்.

பின்னர், சிவகாசி அருகே உள்ள கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை  கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு  விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள தி.மு.க. நிர்வாகிகளுடனான  ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இந்த நிலையில், ரூ.77 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட அலுவலக புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 35 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New district collector office in virudhunagar chief minister mk stalin opened it in person


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->