NDA vs I.N.D.I.A || ஒரே நாளில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை! அதிரும் மும்பை சிட்டி!!
NDA and India alliance parties consulting in mumbai today
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்து உருவான இந்த கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகாரிலும், இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடகாவிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
அதேபோன்று மத்திய பாஜக அரசின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் "இண்டியா" கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டமும் மும்பையில் இன்று தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியின் சின்னம் மற்றும் கொள்கை முழக்கம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் தேசியஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் மும்பையில் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
NDA and India alliance parties consulting in mumbai today