தமிழக பாஜக சார்பில் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசிய கொடி யாத்திரை..!
National flag procession on behalf of Tamil Nadu BJP to express gratitude to the tri services personnel
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியா - பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை கண்டறிந்து தாக்குதல் நடத்தி அழித்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இரவு நேர டிரோன் தாக்குதலிலும் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதை இந்திய ராணுவம் ''ஆப்பரேசன் சிந்தூர்'' மூலம் தடுத்து அழித்ததுடன் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கும், முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து சென்னையில் இன்று தேசிய கொடி ஏந்தி யாத்திரை நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில் கட்சியின் சார்பில் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
English Summary
National flag procession on behalf of Tamil Nadu BJP to express gratitude to the tri services personnel