இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுகின்றன..ராஜ்தாக்கரே பேச்சு!
States that do not speak Hindi are progressing Raj Thackerays speech
பால்தாக்கரே மற்றும் பல தலைவர்களால் என்னையும், உத்தவ் தாக்கரேவையும் இணைத்து வைக்க முடியவில்லை. ஆனால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எங்களை சேர்த்து வைத்துவிட்டார் என ராஜ் தாக்கரே கூறினார்.
இதுகுறித்து ராஜ் தாக்கரே பேசியதாவது:-நான் இந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பிராந்திய மொழியை அழித்து இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்?. எனது மகன் கான்வென்ட் பள்ளியில் படிப்பதாக கூறுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் முன்னோக்கி செல்கின்றன. ஆனாலும் அவர்கள் நாம் இந்தி கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். பல அரசியல் தலைவர்கள், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் ஆங்கிலப்பள்ளிகளில் படித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் தமிழ், தெலுங்கு மொழியை பெருமையாக கருதுகிறார்கள்.
பால்தாக்கரே மற்றும் பல தலைவர்களால் என்னையும், உத்தவ் தாக்கரேவையும் இணைத்து வைக்க முடியவில்லை. ஆனால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எங்களை சேர்த்து வைத்துவிட்டார்.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே ஆங்கிலப்பள்ளியில் படித்தார். ஆங்கில பத்திரிகையில் வேலை பார்த்தார். ஆனால் அவர் மராத்தியின் நிலையில் எந்த சமரசமும் செய்து கொண்டது இல்லை. பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கான்வென்ட் பள்ளியில் படித்தார். அவரது இந்துத்வாவை நீங்கள் கேள்வி எழுப்புவீர்களா?.இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
States that do not speak Hindi are progressing Raj Thackerays speech