அதிமுக எத்தனை தொகுதி., முக்கிய புள்ளியின் ஆவேச பேச்சு! கொண்டாட்டத்தில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளில் முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுகவின் 49 ஆண்டு துவக்க விழா திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அடுத்து உள்ள பாறைப்பட்டி பகுதியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வருகை தந்த போது திண்டுக்கல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு வழியாக போக்குவரத்து நெரிசல் சரியான பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நத்தம் விஸ்வநாதன் அதிமுக கொடியேற்றி, கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆத்தூர் தொகுதியை நாம் இழந்து விட்டோம். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் ஆத்தூர் தொகுதி கைப்பற்ற வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தமிழகத்தில் சிறப்பானதொரு ஆட்சியை கொடுத்து வருகிறார். வரும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக 150 முதல் 180 இடங்களை கைப்பற்றும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும் கட்சியாக, அதிக வாக்கு வித்தியாசத்தில் 234 தொகுதிகளில் குறைந்தது 150 முதல் 180 சட்டமன்றத் தொகுதிகளில் கைப்பற்றுவது உறுதி" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

naththam viswanathan talk about admk victory


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal